உலக வானொலி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து


உலக வானொலி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
x

உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ந்தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் இன்று 'உலக வானொலில தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு 'வானொலி மற்றும் அமைதி'.

இந்த நிலையில் உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி கேட்போர் மற்றும் ஒலிபரப்பு ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலக வானொலி தினத்தின் சிறப்பு சந்தர்ப்பத்தில் அனைத்து வானொலி கேட்போர், ரேடியோ ஜாக்கிகள் மற்றும் ஒலிபரப்பு ஊடக அமைப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதுமையான நிகழ்ச்சிகள் மூலமாகவும், மனிதனின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதன் மூலமாகவும் வானொலி, வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் வருகிற பிப்ரவரி 26-ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ள 'மன் கி பாத்' நிகழ்சிக்கான உள்ளூடுகளை பகிருமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.



Next Story