சுதந்திரதினம்: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவு பெற்று 76 -வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்றும் சற்று நேரத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.
இந்நிலையில், செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் பிரதமர் மோடி டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை அணிந்து பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி புறப்பட்டார்.
Related Tags :
Next Story