பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு: நாளை நடக்கிறது
இமாசலபிரதேசத்தில் பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு, நாளை நடக்கிறது.
புதுடெல்லி,
மாநில தலைமை செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) இம்மாநாடு நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. மாநிலங்களுடன் இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை, உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story