இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!


இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!
x

இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழாவை டெல்லியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022' நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 27,28) இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் டிரோன் திருவிழாவை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கிசான் டிரோன் விமானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார். அதன் பின்பு திறந்தவெளி டிரோன் ஆர்ப்பாட்டங்களைக் காண்பார். டிரோன் கண்காட்சி மையத்தில் உள்ள ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடுவார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப் படைகள், மத்திய ஆயுதப் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் டிரோன் ஸ்டார்ட் அப்கள் என 1600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த டிரோன் திருவிழாவில் பங்கேற்பார்கள்.

கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் டிரோன்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவார்கள்' என்று தெரிவித்துள்ளது.


Next Story