பிரதமர் மோடி வாரணாசிக்கு 7ந்தேதி பயணம்; ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்


பிரதமர் மோடி வாரணாசிக்கு 7ந்தேதி பயணம்; ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
x

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு வரும் 7ந்தேதி சென்று ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.



புதுடெல்லி,



பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வருகிற 7ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் அன்றைய தினம் மதியம் 2 மணி அளவில், வாரணாசி நகரில் உள்ள எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை அவர் தொடங்கி வைக்கிறார். இதில், 1 லட்சம் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவை சமைக்க முடியும்.

இதன்பின் மதியம் 2.45 மணியளவில் ருத்ராக்சம் பகுதியில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் அகில பாரதீய ஷிக்சா சமகம் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இதனை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில், சிக்ராவில் உள்ள சம்பூர்னானந்த ஸ்டேடியத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story