வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு - மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு


தினத்தந்தி 8 March 2024 3:37 AM GMT (Updated: 8 March 2024 3:44 AM GMT)

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, நாரிசக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன்கிடைக்கும். சமையல் கியாசை மலிவு விலைக்கு கொண்டுவருவதன் மூலம் குடும்பங்கள் நலமுடன் இருக்கவும், அவர்களின் குடும்ப சூழ்நிலை வளமாக அமையவும் வேண்டுமென்ற நோக்கம் கொண்டுள்ளோம். இது பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்தும் எங்கள் உறுதிமொழி' என பதிவிட்டுள்ளார்.


Next Story