சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு: அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு: அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறு தேர்வு நடத்தக்கூறிய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெங்களூரு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதால் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அரசின் அறிவிப்பை எதிர்த்து தேர்வில் வெற்றிபெற்ற பவித்ரா என்பவர் உள்பட 28 பேர் கர்நாடக நிர்வாக தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.


அந்த மனுவில் தேர்வில் நேர்மையாக வெற்றி பெற்றவர்கள், முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்களை தனியாக பிரிக்க வேண்டும் என்றும், நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த கூறும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.


இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து உள்ளது. தேர்வு எழுதியவர்களை பிரித்து பார்க்க முடியாது. இதனால் தான் மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story