ரூ.2.5 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது..!


ரூ.2.5 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது..!
x

கோப்புப்படம்

தானேயில் ரூ.2.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

தானே,

மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள கல்வாவில் இன்று மதியம் 1.4 கிலோ எடையுள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான செதுக்கப்பட்ட தந்தத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த யானைத் தந்தத்தை கடத்த முயன்ற இருவரை கைது செய்தனர்.

கல்வாவில் உள்ள சிவாஜி சவுக் பகுதிக்கு யானை தந்தம் விற்க சிலர் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் அமித் வார்லிகர் (வயது 42), சாகர் பாட்டீல் (வயது 40) ஆகிய இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில் 34.50 செ.மீ நீளமும் 8 செ.மீ அகலமும் கொண்ட செதுக்கப்பட்ட தந்தம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

அவர்கள் மீது கல்வா காவல் நிலையத்தில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் தாரா என்ற நபரிடமிருந்து அவர்கள் தந்தத்தை வாங்கியதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story