மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு அசோக்நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் டைரி சர்க்கிள் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது, குமாருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தந்தையும், மகளும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தன்னிடம் இருந்து தான் மகளுக்கும் புற்றுநோய் பரவியதாக குமார் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குடியிருப்பில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சோகமான நேரத்திலும் குமாரின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவரது கண்கள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டது.


Next Story