பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
உத்தரபிரதேசத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ,
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட உத்தரபிரதேச போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரபிரதேசம் லக்கீம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுகைல் அன்சாரி என்ற போலீஸ்காரர் தனது சமூக வலைதளத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நன்கொடை கோரி பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் போலீஸ்காரருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story