பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் அனுமதியின்றி நுழைந்த போலந்து நாட்டுப் பெண் கைது


பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் அனுமதியின்றி நுழைந்த போலந்து நாட்டுப் பெண் கைது
x

பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நுழைந்தாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் அனுமதியின்றி நுழைந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கோவில் வளாகத்திற்குள் வெளிநாட்டுப் பெண் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பெண் கடந்த ஆண்டும் இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளார் எனவும், அவரது பாஸ்போர்ட், விசா மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஸ்ரீ ஜெகன்நாதர் கோவில் சட்டம், 1955-ஐ மீறியதற்காக அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் இந்துக்கள் அல்லாதவர்கள் பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story