அரசியல் ஒலிபெருக்கி...


அரசியல் ஒலிபெருக்கி...
x

ஊழல் அரசை வேரறுக்கும் நாள்

மே 10-ந்தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, ஊழல் அரசை ேவரறுக்கும் நாள். இரட்டை என்ஜினை அகற்றிவிட்டு புதிய என்ஜினை நிறுவும் நாள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வளம் சேர்க்கும். இரட்டை என்ஜின் அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோம்.

- டி.கே.சிவக்குமார்,

கர்நாடக காங்கிரஸ் தலைவர்.

சிறப்பாக தயாராக வேண்டிய அவசியம் இல்லை

மக்களின் ஆசி பா.ஜனதாவுக்கு உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம். பா.ஜனதா ஆண்டு முழுவதும் மக்களுடன் இணைந்து செயல்படுகிறது. எனவே, சட்டசபை தேர்தலுக்கென சிறப்பாக தயாராக வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை. பா.ஜனதாவின் திட்டங்களை மக்கள் நன்று அறிவார்கள். காங்கிரசாரின் செயல்பாடுகளையும் மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

- சி.டி.ரவி எம்.எல்.ஏ.,

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்.

2 கட்டமாக தேர்தல் நடத்தி இருக்கலாம்

சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் தேர்தல் கமிஷனின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி இருந்தால் ஜனதாதளம்(எஸ்) போன்ற மாநில கட்சிகளுக்கு உதவியாக இருந்திருக்கும். குமாரசாமி அதிக கவனம் செலுத்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் நடத்தி வருகிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாமல் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அலை உள்ளது. இதனால் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் ெவற்றி பெறுவோம்.

- பண்டப்பா காசம்பூர் எம்.எல்.ஏ.,

ஜனதாதளம்(எஸ்) ஒருங்கிணைப்பு குழு தலைவர்.

மோதலுக்கு ஆம் ஆத்மி தயார்

தேர்தல் தேதி அறிவிப்புக்காக நாங்கள் காத்திருந்தோம். இந்த மோதலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியின் பணிகளை பார்த்து எங்களுக்கு அங்கீகாரம் அளித்து ஆதரவு கொடுத்தனர். அதேபோல், கர்நாடகத்திலும் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். கர்நாடகத்தில் 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. மக்கள் நேர்மையாக எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

- பிருத்வி ரெட்டி, கர்நாடக மாநில ஆம் ஆத்மி தலைவர்.

பா.ஜனதாவை விட முன்னிலை

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக

டி.கே.சிவக்குமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். அப்போதில் இருந்தே நாங்கள் தேர்தல் பணியாற்ற தொடங்கிவிட்டோம். இதனால், கர்நாடகத்தில் பா.ஜனதாவை விட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் ெவளியிடப்படும்.

- பி.கே.ஹரிபிரசாத்,

மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர்.

40 சதவீத கமிஷன் அரசால் மக்கள் வெறுப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். 40 சதவீத கமிஷன் அரசால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பா.ஜனதா அரசு சாதி அரசியலை கையில் எடுத்துள்ளது. மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இதனால் மக்கள் காங்கிரசை ஆதரிக்க தொடங்கி விட்டனர். இந்த முறை காங்கிரஸ் அனைத்து வழிகளிலும் வெற்றி பெறும்.

- பிரியங்க் கார்கே,

காங்கிரஸ் எம்.எல்.ஏ.


Next Story