அரசியல் ஒலி பெருக்கி
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காண்போம்.
பெங்களூரு'
தேவேகவுடா தான் நட்சத்திர பேச்சாளர்
சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பிரசாரத்திற்காக நடிகர், நடிகைகளை அழைத்து வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தான் எங்களது நட்சத்திர பேச்சாளர். கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் தான். தொண்டர்கள் மூலமாகவே ஜனதாதளம் (எஸ்) கட்சி பிரசாரம் மேற்கொள்ளும். பா.ஜனதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்வது, அவரது சொந்த முடிவாகும். - நிகில் குமாரசாமி,
ஜனதாதளம் (எஸ்) இளைஞரணி தலைவர்.
60 தொகுதிகளுக்கு காங்கிரசில் வேட்பாளர்கள் இல்லை
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை. வேட்பாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், அங்கிருந்தும், இங்கிருந்தும் வேட்பாளர்களை பிடித்து வருகின்றனர். பா.ஜனதாவை சேர்ந்த முக்கிய தலைவர்களையும் தங்கள் கட்சிக்கு வரும்படி காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பிற கட்சிகளை சேர்ந்தவர்களை இழுக்கும் முயற்சியில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர்.
- பசவராஜ் பொம்மை, மாநில முதல்-மந்திரி