வந்தே பாரத் ரெயிலில் பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. புகைப்படம் - ரெயில்வே போலீசார் விசாரணை


வந்தே பாரத் ரெயிலில் பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. புகைப்படம் - ரெயில்வே போலீசார் விசாரணை
x

திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா சென்றார். அப்போது திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயில், மாநில தலைநகரான திருவனந்தபுரத்தை வடக்கின் மாவட்டமான காசர்கோடுடன் இணைக்கிறது. இது கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷோரனூர் சந்திப்பு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரெயில் ஷோரனூர் ரெயில் நிலையம் வந்தபோது ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள் ஒட்டினர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



Next Story