மராட்டிய மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு- தேர்தல் ஆணையம்


மராட்டிய  மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு- தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 27 March 2024 4:38 PM IST (Updated: 27 March 2024 5:47 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

மும்பை,

மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் (நாக்பூர் பெஞ்ச்) வழிகாட்டுதலின்படி, மராட்டியத்தின் 30-அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story