பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை


பெங்களூருவில் இன்றும், நாளையும் மின்தடை
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இன்றும், நாளையும் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு மின்வாரியம்(பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் பெஸ்காம் சார்பில் புதிய மின்இணைப்புகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 17 மற்றும் 18-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) கனகபுரா, இந்திராநகர் மண்டலம், மல்லேசுவரம், எச்.எஸ்.ஆர். லே-அவுட், கோரமங்களா, ஜெயநகர், கெங்கேரி, பீனியா ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இதேபோல் கோடிஹள்ளி, ஹக்குந்தா, பிஜ்ஜஹள்ளி, எம்.ஜி.ரோடு, மல்லேசுவரம், யஷ்வந்தபுரம், ராம்புரா, அக்ரஹாரா, டெலிகாம் லே-அவுட், அத்திப்பள்ளி, அத்திப்பள்ளி இன்டஸ்டிரியல் பகுதி, ஜிகினி இணைப்பு சாலை, காந்திநகர், சாந்திநகர், தேவனூர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story