டெல்லியில் 2-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம்


டெல்லியில் 2-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம்
x

போராட்டத்தையொட்டி சங்க உறுப்பினர்கள் பேரணி செல்ல முயன்ற போது போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

புதுடெல்லி,

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று 2-ம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சி.ஐ.டி.யு., தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மின் பொறியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு மற்றும் கட்சிகளைச் சேர்ந்த சேக்கிழார், ராஜேந்திரன் மற்றும் குடந்தை அரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி சங்க உறுப்பினர்கள் பேரணி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஜந்தர் மந்தர் ரோட்டில் குழுமி கோஷங்கள் எழுப்ப மட்டுமே அனுமதித்தனர். நேற்று முன்தினமும் இதுபோல போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story