பிரதமர் மோடி தியானம் - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்


பிரதமர் மோடி தியானம் - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
x

இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்கப்போவதில்லை என நாட்டு மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமையும் என்று கருதுவதாகவும் நம்பிக்கையுடன் கூறினார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நாடகத்தில் பத்தாயிரம் பேர் வரை இடம் பெற்று இருப்பதாகவும், இது நாட்டு மக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கார்கே விமர்சித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது பிரதமருக்கு நன்கு தெரியும் என்ற மல்லிகார்ஜுன கார்கே, இதற்கான செலவுகளை யார் ஏற்பார்கள் என கேள்வி எழுப்பினார். கடவுளின் மீது மோடிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால், தியானத்தை வீட்டில் செய்யுமாறும், அல்லது இதற்கான செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

1 More update

Next Story