ஜனாதிபதி திரவுபதி முர்மு அயோத்தி பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி கோலாகலமாக நடந்தது. கோவிலின் கருவறையில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். அப்போது முதல் அயோத்தி ராமர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று அவர் அயோத்தி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story