ஒடிசா செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஒடிசா செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று ஒடிசா செல்கிறார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று ஒடிசாவுக்கு செல்கிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அவர் செல்கிறார்.

இன்று அவர் பூரியில் உள்ள சுவாமி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார். அதன் பிறகு புவனேஷ்வர் வந்தடையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் புவனேஷ்வர் ராஜ்பவனில் அவருக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.

11-ம் தேதி (நாளை) புவனேஷ்வரில் உள்ள தபோபன் உயர் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் குன்தாலா குமாரி சாபத் ஆதிவாசி பெண்கள் விடுதி போன்றவற்றை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் புவனேஷ்வர் ஜெயதேவ் பவனிலிருந்து மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.


Next Story