நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு...!


நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு...!
x
தினத்தந்தி 11 Aug 2022 12:56 PM IST (Updated: 11 Aug 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.

புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். ஜெகதீப் தன்கருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story