தலித் சிறுவன் சாவு: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்


தலித் சிறுவன் சாவு: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
x

தலித் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

லக்னோ,

ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.

9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவன் உயிரிழந்தான்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இதுபோன்று வலி ஏற்படுத்தும் சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய தினமும் நடக்கின்றன. தலித் மக்கள் உள்ளிட்டோரின் உயிர், கவுரவத்தை காக்க காங்கிரஸ் அரசு தவறுவதையே சிறுவனின் சாவு காட்டுகிறது. எனவே ராஜஸ்தானில் தற்போதைய அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.


Next Story