டெல்லியில் சுரங்கத்தில் கிடந்த குப்பைகளை கைகளால் எடுத்து சுத்தம் செய்த பிரதமர் மோடி


டெல்லியில் சுரங்கத்தில் கிடந்த குப்பைகளை கைகளால் எடுத்து சுத்தம் செய்த பிரதமர் மோடி
x

டெல்லியில் தொடங்கி வைத்த சுரங்கத்தில் கிடந்த குப்பைகளை கைகளால் எடுத்து பிரதமர் மோடி சுத்தம் செய்துள்ளார்.



புதுடெல்லி,



டெல்லியில், பிரகதி மைதான் திட்டத்தின் பிரதான சுரங்கம் உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்துள்ளார். பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் 920 கோடி ரூபாய் மதிப்பில் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பான தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவை உலக தரத்தில் சுரங்கப்பாதைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரதான சுரங்கப்பாதை உட்பட 6 சுரங்கப்பாதைகளை, இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பைரோன் மார்க்கில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுரங்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடி சுரங்கத்திற்குள் நடந்து சென்றார். அப்போது சுரங்கத்திற்குள் தரையில் கிடந்த காலியான தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளை கைகளால் எடுக்கிறார். இதுபற்றிய வீடியோ வெளிவந்து உள்ளது.

இந்த திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது பிரகதி மைதான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாதது பற்றி விமர்சனங்களை வெளியிட்டார்.

இந்தியாவின் பாரம்பரியம் காட்சிப்படுத்தும் வகையில் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பே பிரகதி மைதான் தொடங்கப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டு விட்டது. வளர்ச்சி திட்டம் பற்றி ஆவணத்தில் இருந்தது. அதன்பின்னர் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வரும்படி அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு, அவர்கள் வேலையை கவனிக்க சென்று விட்டனர் என கூறியுள்ளார்.

இந்த 1.6 கி.மீ. நீள சுரங்கம் கிழக்கு டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதியில் இருந்து இந்தியா கேட் மற்றும் மத்திய டெல்லியின் பிற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.



Next Story