இந்தோ-பசிபிக்கிற்கு பிரதமர் மோடி ஒரு மந்திரம் வழங்கியுள்ளார்: பாதுகாப்பு மந்திரி பேச்சு


இந்தோ-பசிபிக்கிற்கு பிரதமர் மோடி ஒரு மந்திரம் வழங்கியுள்ளார்:  பாதுகாப்பு மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 26 Sept 2023 12:16 PM IST (Updated: 26 Sept 2023 4:27 PM IST)
t-max-icont-min-icon

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு பிரதமர் மோடி ஒரு மந்திரம் வழங்கியுள்ளார் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் 13-வது இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகளுக்கான மாநாடு இன்று நடந்தது. இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது என கூறினார்.

நம்முடைய பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஒரு மந்திரம் தந்திருக்கிறார். அது பரஸ்பர மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

இந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் ஆனது, கடல்வழி வர்த்தகம் அல்லது தொலைதொடர்பு வழிகள் என்ற அளவில் நின்று விடவில்லை.

ஒரு விரிவான, அரசியல் சார்ந்த, பாதுகாப்பு மற்றும் தூதரக பரிமாணங்களையும் அது கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான மாநாட்டின் கருத்துருவானது, அமைதிக்காக ஒன்றிணைவோம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகும்.

இந்த கூட்டங்களின் நோக்கம் ஆனது, பரஸ்பர புரிதல், பேச்சுவார்த்தை மற்றும் நட்புறவின் வழியே இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பது ஆகும் என்று அவர் பேசியுள்ளார்.

1 More update

Next Story