அசாமின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!


அசாமின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
x
தினத்தந்தி 29 May 2023 1:13 PM IST (Updated: 29 May 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

அசாமின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். .

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த ரெயில் அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

நாட்டின் 18வது ரெயில் சேவையாகவும், மேற்கு வங்காளத்தின் 3வது ரெயில் சேவையாகவும் இது இருக்கும். வாரம் 6 நாட்கள் இந்த ரெயில் சேவை இயக்கப்படும். இந்த ரெயில், 411 கிலோமீட்டர் தூரத்தை ஐந்தரை மணி நேரங்களில் கடந்துவிடும்.

மேலும், 181 கிலோமீட்டம் தூரம் கொண்ட புதிய மின்சார ரெயில் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

1 More update

Next Story