நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்... மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்... மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
x

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதானில் இருந்த மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி நேதாஜியை பற்றி கலந்துரையாடினார்.

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் சம்விதான் சதானில் உள்ள நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதானில் இருந்த மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி நேதாஜியை பற்றி கலந்துரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,' பராக்கிரம திவாஸ் அன்று இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இன்று அவரது ஜெயந்தி நாளில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையையும், தைரியத்தையும் போற்றுகிறோம். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.' என்று தெரிவித்திருந்தார்.



Next Story