முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
x

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.



புதுடெல்லி,


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப்பில் உள்ள கா என்ற கிராமத்தில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26ல் பிறந்தவர். பஞ்சாப் பல்கலை கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களிலும் அவர் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

2004 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் 2 முறை தொடர்ச்சியாக நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவருக்கு இன்று 90 வயது பூர்த்தியாகிறது. 1990-ம் ஆண்டுகளில் பல சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ததற்காக பாராட்டுகளை பெற்றவர் அவர்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை அவருக்கு இன்று தெரிவித்து கொண்டார். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்காக வேண்டி கொள்கிறேன் என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.


Next Story