அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு


அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு
x

பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இருபுறமும் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுள்ளனர்.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி, அயோத்தி நகருக்கான ரூ.11 ஆயிரம் கோடி திட்டப்பணிகளையும், பிற மாவட்டங்களுக்கான ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

அத்துடன், புதிய விமான நிலையம் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்காக அயோத்தி வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

தொடர்ந்து பிரதமர் மோடி, மறுசீரமைக்கப்பட ரெயில் நிலையத்தை திறந்துவைப்பதற்காக விமான நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்றுகொண்டிருக்கிறார். பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இருபுறமும் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுள்ளனர்.

அவர்கள் பிரதமருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் சென்றுகொண்டிருக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story