முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமான பிரகதி மைதானத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கான பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தேசிய பயிற்சி மாநாடு திறன் மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகிறது.
மத்திய பயிற்சி நிறுவனங்கள், மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்கள், மண்டல பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள்.
பயிற்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை வலுப்படுத்த இந்த மாநாடு உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.