எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு


எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
x

வரும் மக்களவைத் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அதில்,

நாட்டின் 75-வது குடியரசு தின கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. பா.ஜ.க. கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வதித்துள்ளார். வரும் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.

எங்கள் பேச்சைக்கேட்கக்கூடாது என திட்டமிட்டே நீங்கள் வந்திருக்கிறீர்கள். எனது குரலை எதிர்கட்சியினர் ஒடுக்க முடியாது. இந்திய நாட்டு மக்கள் பாஜகவின் பேச்சை கேட்க முடிவு செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் எண்ணங்கள் காலாவதியாகிவிட்டன. காங்கிரசால் அதன் தலைவர்களுக்கே உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்தன. நக்சலைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணம். நாட்டை வடக்கு,தெற்கு என பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12-வது இடத்திற்கு பின்னடைந்தது. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு வந்துள்ளது என்றார்.

பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை தாக்கி சில வார்த்தைகள் பேசியதற்கு காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.


Next Story