விண்வெளி செல்லும் வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி


விண்வெளி செல்லும் வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Feb 2024 7:20 AM GMT (Updated: 27 Feb 2024 7:29 AM GMT)

ககன்யான் திட்டத்திற்காக தேர்வான விண்வெளி வீரர்களுக்கு பிரதமர் மோடி பேட்ஜ்கள் வழங்கினார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் உள்பட 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையடுத்து நாளை தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்றபின் திருநெல்வேலியில் இருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் விமானப்படை தளத்துக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து விமானத்தில் மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்தநிலையில், திருவனந்தபுரம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தநிலையில், விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.

கடந்த 6 வருடங்களாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களுக்கு இந்த பேட்ஜ்கள் வழங்கப்பட்டன. விண்ணில் பறக்கப்போகும் 4 வீரர்களுக்கும் ரஷியாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.


Next Story