சவுதி அரேபியாவின் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்
ஜெட்டா நகரம் வழியாக இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபிய அரசு வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி,
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார். இந்த உரையாடலின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும், பரஸ்பர உறவுகள் தொடர்பான பலதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரம் வழியாக இந்திய நாட்டினரை அழைத்து வருவதற்கு சவுதி அரேபிய அரசு வழங்கிய ஆதரவிற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் ஹஜ் யாத்திரைக்கு பிரதமர் மோடி, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Related Tags :
Next Story