கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 67 கைதிகள் விடுதலை


கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 67 கைதிகள் விடுதலை
x

கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 67 கைதிகளை விடுதலை செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 67 கைதிகளை விடுதலை செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முட்டை கொள்முதல்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வேளாண் சந்தைகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.130 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள்-குழந்தைகள் நலத்துறை சார்பில் மண்டலம் வாரியாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள்-கர்ப்பிணி பெண்களுக்கு முட்டை வழங்க ரூ.297 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

கைதிகள் விடுதலை

சட்டவிரோத கல்குவாரிகளை முறைப்படுத்தும் நோக்கத்தில் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.6 ஆயிரத்து 105 கோடி அளவுக்கு அபராதத்தொகை பாக்கி உள்ளது. இந்த முடிவால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதற்கான விதிமுறைகளை வகுக்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முறை வழங்கப்படும் தீர்வு ஆகும்.

வனம், சுற்றுச்சூழல் துறையின் வன உயிரியல் பூங்காக்களை சுற்றிலும் உள்ள பகுதிகளை பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் சிறையில் 67 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.22 கோடியில் பெங்களூருவில் உள்ள வாஜ்பாய் அரசு மருத்துவ கல்லூரியில் நவீன பன்னோக்கு ஆஸ்பத்திரி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.


Next Story