மத்திய பிரதேசம்: ராகுல்காந்தி நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்


மத்திய பிரதேசம்: ராகுல்காந்தி நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்
x

மத்தியபிரதேசத்தில் நடைபெறும் 'பாரத் ஜோடோ நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மராட்டியத்தில் நடைபயணம் நடந்து வருகிறது.

நேற்று அவரது நடைபயணம் மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள சேகாவ் கஜானன் ததா பாட்டீல் மார்க்கெட் யார்டில் இருந்து தொடங்கியது. இரவில் ஜல்காவ் மாவட்டத்தை நடைபயணம் சென்றடைந்தது.

இன்று 74-வது நாளாக பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ராகுல்காந்தி தனது நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இன்றுடன் மராட்டியத்தில் நிறைவு பெறும் அவரது நடைபயணம் இரவில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று பின்னர் அங்கு பயணிக்க உள்ளது.

இந்த நிலையில், மத்தியபிரதேசத்தில் நடைபெறும் நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார். நவம்பர் 23-ந் தேதி முதல் 25 வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

1 More update

Next Story