2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம் செல்கிறார் பிரியங்கா காந்தி


2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம்  செல்கிறார் பிரியங்கா காந்தி
x

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இமாச்சலில் பெய்த கனமழை, வெள்ளத்துக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

புதுடெல்லி,

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை 2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,

சமீபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மணாலி, குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு பிரியங்கா காந்தி வருகை தர உள்ளார்.

மேலும், மலைப்பிரதேசங்களில் பல்வேறு நிவாரண பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இமாச்சலில் பெய்த கனமழை, வெள்ளத்துக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இமாச்சலத்தை மீண்டும் மீட்டெடுக்க மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story