ஏ.சி. பஸ்சுக்கு பெயர் தேர்வு செய்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு; கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு


ஏ.சி. பஸ்சுக்கு பெயர் தேர்வு செய்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு; கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ்சுக்கு பெயர் தேர்வு செய்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பஸ்கள் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கு பெயர் வைக்க பொதுமக்கள், பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், பயணிகள் கூறும் பெயர்களில் ஏதாவது ஒரு பெயர் தேர்வு செய்யப்பட்டு பஸ்களுக்கு வைக்கப்படும். அந்த பெயரை தேர்வு செய்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

இதுபோல பஸ்களுக்கு டிசைன்கள் வடிவமைத்து தரவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஏதாவது ஒரு டிசைன் பஸ்சில் ஒட்டப்படும். அந்த டிசைனை அனுப்பியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இதற்கு விண்ணபிக்க வருகிற 5-ந் தேதி கடைசி நாள். cpro@ksrtc.org என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது

1 More update

Next Story