சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்


சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2023 4:56 PM IST (Updated: 14 Dec 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதேபோல, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.


Next Story