கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை ஆந்திர மாநில அரசு வறட்சி நிவாரண திட்டத்துக்கு மாற்றியதாக தெரிகிறத. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.வசந்த், 'கொரோனாவால் இறந்த 4 குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது' என வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நிவாரணத்தொகை வறட்சி நிதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அதனை 2 நாட்களுக்குள் பேரிடர் மேலாண்மை நிதிக்கு ஆந்திர அரசு மாற்ற வேண்டும். ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story