பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு


பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு
x

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அமிர்தசரஸ்,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ரானுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பஞ்சாபைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனிடையே பஞ்சாபைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

மோகா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான்கு ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமும், அரசு வேலையும் அறிவித்தார்.

இந்த சம்பவத்தில் (பயங்கரவாத தாக்குதலில்) ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற மிகவும் வருத்தமான செய்தி எங்களுக்கு கிடைத்தது. அவர்களில் நான்கு பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள்," என்று அவர் கூறினார்.

இந்த மாவீரர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களது தியாகம், தங்கள் சக வீரர்களை மிகவும் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட தூண்டும் என்றும் அவர் கூறினார்.


Next Story