இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க குவாட் உச்சி மாநாட்டில் ஒப்புதல்


இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க குவாட் உச்சி மாநாட்டில் ஒப்புதல்
x

இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு குவாட் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

டோக்கியோ,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்துள்ளது. அதன் செயல்முறை சிறந்த வடிவம் பெற்றுள்ளது. நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனவுறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும் மற்றும் ஆர்வமும் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எல்லை வரையறைகள், இறையாண்மை மற்றும் பிரச்சினைகளுக்கான சுமூக தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து குவாட் தலைவர்கள் ஆலோசித்தனர். மேலும் இந்தோ-பசிபிக் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு குவாட் உச்சி மாநாட்டின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்கு இது உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story