24 மணி நேரமும் இந்து - முஸ்லிம் இடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது; டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி பேச்சு


24 மணி நேரமும் இந்து - முஸ்லிம் இடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது; டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி பேச்சு
x

24 மணி நேரமும் 7 நாட்களும் இந்து - முஸ்லிம் இடையே மத வெறுப்புணர்வு பரப்பப்படுவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையான இந்திய ஒற்றுமை பயணம் இன்று டெல்லியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம் 108வது நாளான இன்று டெல்லியை அடைந்துள்ளது.

இந்த பேரணியில் இன்று ராகுல்காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இணைந்தார்.

இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:- உண்மையான பிரச்சினையில் இருந்து உங்களை திசைதிருப்ப பாஜக 7 நாட்களும் 24 மணி நேரமும் (24x7) இந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே வெறுப்பு பரப்புகிறது..

நான் 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளேன். ஆனால், எந்த வெறுப்பையும் பார்க்கவில்லை. நான் தொலைக்காட்சியை ஆன் செய்தால் நான் வன்முறையை பார்க்கிறேன். ஊடகம் ஒரு நண்பன். ஆனால், பின்னால் இருந்து உத்தரவுகள் வருவதால் அவை நாங்கள் பார்த்த உண்மை பக்கத்தை அவை காட்டுவதில்லை' என்றார்


Next Story