2 ஆண்டு தண்டனைக்கு எதிரான ராகுல்காந்தி மனுவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆட்சேபனை மனு தாக்கல்


2 ஆண்டு தண்டனைக்கு எதிரான ராகுல்காந்தி மனுவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆட்சேபனை மனு தாக்கல்
x

2 ஆண்டு தண்டனைக்கு எதிரான ராகுல்காந்தி மனுவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.

சூரத்,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.பி. பதவிைய இழந்தார். இந்த தீ்ர்ப்புக்கு எதிராக கடந்த 3-ந் தேதி, சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார்.

குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.இதற்கு பதில் அளிக்குமாறு, ராகுல்காந்திக்கு தண்டனை பெற்றுத்தந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, புர்னேஷ் மோடி எம்.எல்.ஏ. நேற்று சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிபதி மொகரா முன்பு நேரில் ஆஜராகி, ராகுல்காந்தி மனுவுக்கு எதிரான தனது 30 பக்க ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீது 13-ந் தேதி இருதரப்பு வாதம் நடக்கிறது. அதே நாளில், ராகுல்காந்தி மனு மீது செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.


Next Story