கர்நாடகத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்


கர்நாடகத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்
x

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

புதுடெல்லி,

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. தேர்தல் பிரச்சார பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெறும் 'ஜெய் பாரத்' பேரணியில் அவர் கலந்து கொள்கிறார். இதே இடத்தில் தான் கடந்த முறை பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்து சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story