மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதும் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல்


மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதும் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல்
x

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதும் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் முகர்ஜிநகர் பகுதிக்கு சென்றார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் உரையாடினார். சாலையோரம் ஒரு நாற்காலியில் அமர்ந்து அவர் பேசினார்.

மாணவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்களை கேட்டறிந்தார்.

ஏற்கனவே இந்த வாரம், ஜூம்மா மசூதி பகுதிக்கு சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள சாலையோர உணவகங்களில் சாப்பிட்டார்.


Next Story