ராகுல்காந்தி, பிரியங்கா இன்று வயநாடு பயணம்


ராகுல்காந்தி, பிரியங்கா இன்று வயநாடு பயணம்
x

கோப்புப்படம் ANI

ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்கின்றனர்.

புதுடெல்லி,

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் இன்று வயநாடு செல்கின்றனர். முன்னதாக அவர்கள் நேற்று வயநாடு செல்ல இருந்த நிலையில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று வயநாடுக்கு செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசுகின்றனர்.

1 More update

Next Story