மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி
அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்த ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் ராகுல்காந்தி தோல்வி அடைந்தார். ஆனால் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது விருப்பப்படி கூட்டணியில் நீடிக்கலாம் அல்லது வெளியேறிக் கொள்ளலாம். ஆனால் எங்கள் கட்சி அவரை வெளியேற்றாது என்றார்.