ராகுல் காந்தி நாளை மணிப்பூர் பயணம்
ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார்.
டெல்லி,
மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ள நிலையில் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். மேலும், வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.