இம்மாத இறுதியில் ராகுல்காந்தி இங்கிலாந்து பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இம்மாத இறுதியில் இங்கிலாந்து ெசல்கிறார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் உரையாற்றுகிறார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்று உரையாற்ற ஆர்வமாக இருக்கிறேன். புவி அரசியல், சர்வதேச உறவுகள், ஜனநாயகம் ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்குபவர்களை சந்திக்க போவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story