அசாமில் நியாய யாத்திரையின்போது 'ஆஞ்சநேயர்' முகமூடி அணிந்த ராகுல் காந்தி


அசாமில் நியாய யாத்திரையின்போது ஆஞ்சநேயர் முகமூடி அணிந்த ராகுல் காந்தி
x

கலாச்சார நடன நிகழ்ச்சியை கண்டுகளித்த ராகுல் காந்தி, அங்குள்ள நடன கலைஞர்களுடன் உரையாடினார்.

திஸ்பூர்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, நேற்று அசாம் சென்றடைந்தார்.

பின்னர் அசாமின் மஜுலி மாவட்டத்தில் உள்ள அவுநியாதி சத்திரத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது அங்கு நடைபெற்ற கலாச்சார நடன நிகழ்ச்சியை கண்டுகளித்த ராகுல் காந்தி, அங்குள்ள நடன கலைஞர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 'ஆஞ்சநேயர்' முகமூடியை வாங்கி அணிந்துகொண்டு, ஆஞ்சநேயரின் ஆயுதமான கதையை கையில் பிடித்தபடி உற்சாமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். பின்னர் நடன கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Next Story