இறுதிகட்டத்தை எட்டிவரும் ராகுல்காந்தியின் யாத்திரை... இன்று பஞ்சாபில் தொடக்கம்
ராகுல் காந்தியின் யாத்திரை இன்று பஞ்சாபில் தொடங்கும் நிலையில், இன்னும் ஜம்மு காஷ்மீரில் மட்டும் யாத்திரை நடைபெற உள்ளது.
சண்டிகர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது பஞ்சாபில் நுழைகிறது.
பஞ்சாபில் இன்று தொடங்கும் நிலையில், இன்னும் ஜம்மு காஷ்மீரில் மட்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story